திருவண்ணாமலை : பௌர்ணமி கிரிவலம் நாளை காலை முதல் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்த மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் (11-ந் தேதி) நாளை காலை தொடங்குகிறது.

மாதம்தோறும் பௌர்ணமி மற்றும் பிரதோஷ காலங்களில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மலையை சுற்றி 14 கிலோ மீட்டருக்கு கிரிவலம் சுற்றி வருவது வழக்கம்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிரிவலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிரிவலம் நடந்து வருகிறது. நாளை ஆடி பௌர்ணமி என்பதால் கிரிவலத்திற்கு அதிகளவிலான பக்தர்கள் வருவகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்திற்கான பௌர்ணமி 11-ந் தேதி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thuruvannamalai Girivalam starts from tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->