திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
Thuruvannamalai karthigai deepam devotees allowed to afternoon 2 clok only in mountain
தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட அருணாச்சலேஸ்வரர் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பங்கேற்க கார்த்திகை தீப தினமான டிசம்பர் 6ஆம் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Thuruvannamalai karthigai deepam devotees allowed to afternoon 2 clok only in mountain