தூத்துக்குடி | இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை சேர்த்த வாலிபர் மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


குலசேகரன்நல்லூரில் இளம்பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது வழக்கு:

தூத்துக்குடி: குலசேகரன்நல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். 

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டியை சேர்ந்த சிவகுமார் (வயது 25) இளம்பெண்ணின் உறவுக்கார வாலிபர். சிவகுமாரின் சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

சிவகுமார் கடந்த சில நாட்களாக மண்டைக்காட்டில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி கொண்டு படகு கட்டும் கூடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இளம்பெண்ணும் சிவகுமாரும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் சிவகுமார், நர்சிங் மனைவியிடம் கடந்த 2-ம் தேதி தனது சகோதரி குழந்தைக்கு பிறந்த நாள் என கூறி, மாணவியை மண்டைக்காட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

பின்னர், சிவகுமார் மாணவிக்கு தெரியாமல் குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கமடைய வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, பிறகு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக சமாதானம் கூறியுள்ளார். 

சிவகுமாரின் வீட்டினர் நர்சிங் மாணவியை திருமணம் செய்துகொள்ள எதிப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மாணவி குளச்சல் மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். 

மகளிர் போலீசார் சிவகுமார் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thuththukudi near 20 age girl molested case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->