ரவுடி பேபி சூர்யா, லாக்கப் பேபி சூர்யாவாக மாற்றம்.. ஸ்பா பெயரில் விபச்சாரம்... காவல்துறை அதிரடி.!
Tic Tok Famous Rowdy Baby Surya Arrest due to Trichy Prostitution
டிக் டாக் உலகில் மிகவும் பிரபலமான பெண்மணியாக இருந்து வந்தவர் ரவுடி பேபி சூர்யா. சூர்யா என்ற பெயரை வைத்துக்கொண்டு, ரவுடிபேபியாக தன்னை அடையாளப்படுத்திய நிலையில், இவரை வைத்தும் மற்றொருவரை சேர்த்து வைத்தும் பல மீம்ஸ்களும், வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாக, அவரது குடும்பத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், இவரின் நடவடிக்கை காரணமாக சூர்யாவை அவரது கணவர் விவாகரத்து செய்த நிலையில், சூர்யா தனது குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார். இதன் பின்னர் டிக் டாக் செயலியையும் மத்திய அரசு தடை செய்து அறிவித்ததை தொடர்ந்து, டிக் டாக் போல இருக்கும் பிற செயலிகளில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவு செய்து வந்தார்.
டிக் டாக் செயலி இருக்கும் போதே பல்வேறு அலப்பறைகளை கூட்டி, தற்கொலை முடிவிற்கு சென்ற நிலையில், தற்கொலை வேண்டாம் என்றும் பலரும் தெரிவித்தனர். இதனையடுத்து எனக்கு ரூ.5 இலட்சம் பணம் வேண்டும் என்றும், பணம் கொடுத்தால் நான் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் எனவும், எனது குடும்பத்தை பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருப்பேன் என்றும் தெரிவித்து ஆறுதல் கூறிய பலரையும் அதிரவைத்திருந்தார்.
அதனைப் போன்று டிக்டாக்கில் பிரபலங்களுக்கு இடையே நடைபெறும் சண்டை ஆனது வாடிக்கையாக இருந்துவருகிறது. அவர்களுக்கு கிடைக்கும் லைக்ஸ், கமன்ட், பாலோவர், கவர்ச்சி போன்ற விஷயங்களைப் பொறுத்து இந்த சண்டை அரங்கேறி வந்த நிலையில், தற்போது ரவுடி பேபி சூர்யா தினேஷ் என்பவருடன் குடித்தனம் நடத்தி வருவதாக தெரியவருகிறது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில், சர்வீஸ் ரோட்டில் அமைந்துள்ள சன் ஸ்பா என்ற ஸ்பா சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், சம்பவத்தன்று அதிரடியாக அந்த ஸ்பா சென்டருக்குள் நுழைந்து சோதனை செய்துள்ளனர்.
இதன்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த பிரதீபா மற்றும் மாலதி என்ற இரண்டு பெண்களை மீட்டு, அரசு காப்பகத்திற்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சென்டரின் உரிமையாளர் குறித்து விசாரிக்கையில், அது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பதும், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சூர்யா என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்களின் தற்போதைய இல்லத்துக்கு சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு ஸ்பாவின் உரிமையாளர்களாக இருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் தினேஷையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tic Tok Famous Rowdy Baby Surya Arrest due to Trichy Prostitution