குறிப்பிட்ட நேரத்தில் பட்டமளிப்பு விழாக்கள் - ஆளுநர் மாளிகை பெருமிதம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநர் மளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மாநில அரசுப் பல்கலைக்கழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பல்கலைக்கழகங்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதை உறுதிப்படுத்திடவும், அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாவினை குறித்த நேரத்தில் நடத்தினார்.

மேலும், 20 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள், நமது மாநிலத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டில் நிலைக்கொண்டும் நமது மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் அக்டோபர் 31, 2024 ஆம் தேதிக்குள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்திட அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 09 செப்டம்பர் 2024 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (கோயம்புத்தூர்) பட்டமளிப்பு விழாவை தொடங்கி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (நாகப்பட்டினம்), சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னை) ஆகியவற்றின் பட்டமளிப்பு விழாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமை வகித்தார். அத்துடன் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (சென்னை), தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (சென்னை), தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (சென்னை), திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (வேலூர்), பாரதியார் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), பெரியார் பல்கலைக்கழகம் (சேலம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (சிதம்பரம்), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (சென்னை), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (மதுரை), அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (கொடைக்கானல்), தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் (சென்னை), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (திருநெல்வேலி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சிராப்பள்ளி) ஆகிய அரசுப் பல்கலைக்கழகங்களின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, மாணவர்களை தங்கள் முயற்சிகளில் வெற்றிப் பெற செய்ய மேற்கொண்ட உறுதிப்பாட்டின்படி, 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் மாதம் 2024 இறுதிக்குள் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Timely convocation ceremonies governor house proud


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->