விவசாய கிணற்றில் சடலமாக இருந்த சிறுவனின் உடல்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம்: திண்டிவனம் அடுத்து உள்ள கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் கிரி (வயது13) இவர், பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது தந்தை முத்துவேல், அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் வேலை செய்து வருகிறார். தாய் மாலாவும் கூலி வேலை செய்பவர். நேற்று தாய் தந்தை இருவரும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர். கிரி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த நிலையில் திடீரென மாயமானார். 

இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, கிரியை கிராமம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர்.ஆனால் கிரி கிடைக்கவில்லை. 

இதனால், நேற்று மாலை முத்துவேல், மாலா இருவரும் பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சிறுவனை தேடி வந்தனர். 

இந்நிலையில் இன்று காலை அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கிரி பிணமாக மிதந்ததை பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு  விரைந்த வந்த பிரம்மதேசம் தலைமை காவலர் அன்பரசு தலைமையிலான போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
மேலும், காணாமல் போன சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tindivanam well body recovered issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->