முருகனுக்கு அரோகரா! திடீரென உள்வாங்கிய கடல்! திருச்செந்தூரில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூரில் இன்று அதிகாலை வேலையில்  கடல் திடீரென 30 அடிக்கும் மேலாக  உள்வாங்கியதால் கடலில் நீராடிக்கொண்டிருந்த  பொதுமக்களை பாதுகாப்பை கருதி போலீசார் அப்புறப்படுத்தினர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் தினமும் ஏராளமான ஒரு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூருக்கு செல்கிறார்கள்.

திருவிழா  நாட்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திருச்செந்தூரில் திரள்வார்கள். பவுர்ணமி தினத்தை ஒட்டி ஏராளமானவர்கள் வருவார்கள். தின்தோறும் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளைக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 30 அடிக்கும் தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் உள்வாங்கியதை பார்த்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பினர். கடற்கரையில் திரண்டு இருந்த பொதுமக்கள் பாறையின் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

திருச்செந்தூரில் கடல் 20 அடிக்கு மேல் உள்வாங்கிய சம்பவம் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு போலீசார் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruchendur the sea is deeply absorbed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->