திருநெல்வேலி : தொடங்கியது நெல்லையப்பர் கோவில் திருவிழா.. ஜூன் 21ல் ஆனித் தேரோட்டம்..!! - Seithipunal
Seithipunal



திருநெல்வேலி டவுனில் உள்ளது நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில். இங்கு வருடா வருடம் ஆனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு 418ஆவது ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நேற்று மாலை ஆனித் திருவிழாவுக்காக செய்யப்படும் பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு, கொடிப் பட்டம் ரா வீதிகளில் உலா வந்தது. மேலும் கோவிலின் பெரிய கொடி மரம், பஞ்ச மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக் கட்டுதலுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணிக்கு திருவிழாவின் தொடக்க நாளுக்கு கோவில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனத்துடன் காலை சந்தி பூஜைகள் நடந்தன. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருவிழாவிற்கான  கொடி ஏற்றப்பட்டது. 

இந்த ஆனித் திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். இந்த 10 நாட்களும் நெல்லையப்ப சுவாமியும், காந்திமதி அம்பாளும் தினமும் காலை, மாலை என இரு வேளையும் ரத வீதிகளில் உலா வருவார்கள். மேலும் தினமும் கோவில் கலையரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மேலும் ஆசியாவின் அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேரோட்டம் வரும் ஜூன் 21ம் தேதி  நடைபெற உள்ளது. இதற்காக ஜூன் 21 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Nellaiappar Temple Car Festival On June 21st


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->