காரில் திருப்பதிக்கு போறிங்களா? வெளியான எச்சரிக்கை!
Tirupati temple devotees
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருகிற பக்தர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஏற்பட்ட சம்பவங்களில், கோடை வெப்பம் காரணமாக மலைப்பாதையில் பயணித்த 2 கார்களுக்கு தீப்பிடித்து சேதமடைந்தது. இதனை தொடர்ந்து நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், பக்தர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, 500 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரம் பயணிக்கும் வாகனங்களில் வெப்பம் அதிகமாக ஏற்படுவதால், மலைப்பாதைக்கு ஏறும் முன் குறைந்தது 30 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி குளிர்விக்க வேண்டும்.
மேலும், வாகனத்தின் எஞ்சின் கூலண்ட், ஆயில் நிலை, பிரேக் மற்றும் ஏசி ஆகியவற்றை சரிபார்த்து பயணிக்க வேண்டும். மலைப்பாதையில் ஏசி இயக்கக் கூடாது என்றும், தொடர்ந்து பிரேக் போடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களை நியூட்ரல் நிலையில் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதால், பாதுகாப்பான முறையில் சாமர்த்தியமாக வாகனங்களை இயக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.