திருப்பூரில் நடுரோட்டில் மனைவியின் கையை வெட்டிய கணவன்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் தாயார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சரண்யா என்ற பெண்ணை, பின் தொடர்ந்து வந்த அவரது கணவர் ரமேஷ் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சரண்யா இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த கணவன் ரமேஷ் திடீரென அவரது கையை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.  

இந்த தாக்குதலில் காயமடைந்த சரண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

மனைவியின் கையை வெட்டிய ரமேஷ் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சரண்யாவை ஏன் தாக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Husband domestic abuse


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->