பகீர் சம்பவம்.. வாழ்நாள் முழுக்க அலைய வச்சுருவேன்.. தேர்தல் அதிகாரிகளுக்கு பாஜக வேட்பாளர் மிரட்டல்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ பி முருகானந்தம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினரை பகிரங்கமாக மிரட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் புகழேந்தி என்பவரிடம் பாஜக வேட்பாளர் முருகானந்தம் "உங்க பேர் என்ன? திமுகவில் எங்களை மிரட்ட சொல்லி சொன்னாங்களா? உங்க ஐடி கார்டு எங்க? மரியாதையா பேசி பழகுங்க.‌.

வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வச்சிருவேன்.. என்ன சவுண்டு விடுறீங்க.." என பேசிக்கொண்டு இருக்கும் பதே மற்றொரு அதிகாரி அவரை சமாதானம் செய்ய முயன்ற போது "நான் உன்கிட்ட பேசறனா.. நான் இவர்கிட்ட பேசிட்டு இருக்கேன்.." என மற்றொரு அதிகாரியை அடிக்க பாய்வதுபோல காருக்குள்ளேயே எகிறினார் ஏ.பி முருகானந்தம். தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகளை மிரட்டும் தோனியில் பேசிய முருகானந்தத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur BJP candidate threaten to election officers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->