திருப்பூர்: பிரபல ரவுடி முகம் சிதைத்து, கை துண்டாக்கப்பட்டு படுகொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்! - Seithipunal
Seithipunal


பல்லடம் - திருப்பூர் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரையான் புதூர் சாலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் ஒரு நபர் மரண பயத்தில் ஓடுவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த நபர் சாலை ஓரம் இருந்த சிறிய காடு பகுதியில் ஓடவே, அவரை துரத்தி வந்த நான்கு பேர் கொண்ட மர்மக்கொம்பல் மடக்கிப்பிடித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. 

இந்தப் படுகொலை சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். இதில் சிவகங்கை மாவட்டம், உடையான் குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி வினோத் கண்ணன் என்பது தெரிய வந்தது. 

படுகொலை செய்யப்பட்ட வினோத் கண்ணனின் முகத்தில் சரமாரியான வெட்டு விழுந்ததால், அவரின் முகம் சிதைந்து போய் கொடூரமாக இருந்துள்ளது. மேலும் அவரின் கையில் வெட்டுப்பட்டு கைது துண்டாகும் நிலைக்கு இருந்துள்ளது. இதனை அடுத்து அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட வினோத் கண்ணன் எதற்காக சிவகங்கையில் இருந்து திருப்பூர் வந்தார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur palladam rowdy hacked to death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->