திருப்பூர் | பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! கதறும் பெற்றோர்கள்!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறையில் சிறுமிக்கு மின்சாரம் பாய்ந்து அவரது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

திண்டுக்கல் அருகே உள்ள கூட்டத்துப்பட்டியைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் கட்டிட தொழிலாளிகள். 

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். டேவிட் குடும்பத்துடன் திருப்பூர் சேரங்காடு பகுதியில் வசித்து வந்தனர். இவரது மூத்த மகள் ஜோஸ்லின் ஜெனியா (வயது 13) இவர் திருப்பூர் சேரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி ஜோஸ்லின் பள்ளி கழிவறைக்கு சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து அவரது உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. 

இதனால் சிறுமி கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் அவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சிறுமிக்கு மின்சாரம் தாக்கியதால் முழங்கால் எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு போன்ற இடங்களில் முறிவு ஏற்பட்டது. 

இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி தொடர்ந்து 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும்  சிறுமிக்கு சரியான முறையில் காது கேட்காததால் அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் காதுகளில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டதால் 90% கேட்கும் திறன் இழந்துள்ளதாக தெரிவித்தனர். 

இது குறித்து சிறுமியின் தாய் ஜெனிபர் தெரிவித்திருப்பதாவது, ''மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த எனது மகள் 20 நாட்களுக்கு முன்பு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார். 

இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்த பள்ளி நிர்வாகம் எனது மகளை குறை சொல்கிறது. இதனால் எனது மகளுக்கு முழங்கை, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் காதுகளில் 90% கேட்கும் திறனை இழந்துள்ளார். இதனால் எனது மகளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. 

எனது மகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளித்து அவரை பழைய நிலைக்கு திரும்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur student electrocuted in school toilet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->