திருவள்ளூர் | மாநகர பேருந்து கண்ணாடி மீது கல்வீசிய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!
Tiruvallur Mysterious persons city bus glass threw stones Police investigation
செங்குன்றத்திலிருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு பகுதிக்கு இயக்கப்படும் மாநகர பேருந்து நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
பழவேற்காடு அருகே உள்ள பிரளயம் பாக்கம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் பேருந்து ஜன்னல் கண்ணாடி மீது கல் வீசி தாக்கினார்.
இதில் பேருந்து கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பேருந்தில் இருந்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டு பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.
சக பேருந்து ட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் பழவேற்காடு பகுதிக்கு வரும்போது மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பேருந்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இரவில் தூங்கும் அறை இல்லை எனவும் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் தூங்குவதற்கு சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.
பயணம் சீட்டு வசூல் பணத்தை வைப்பதற்கும் போதிய பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து ஓட்டுநர்கள், நடத்தினர்கள் புகார் அளித்தனர். இதனால் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Tiruvallur Mysterious persons city bus glass threw stones Police investigation