மின்கம்பி அறுந்து விழுந்து விபரீதம்: தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்கள்!
Tiruvallur power line fell down workers died
திருவள்ளூர், கும்மிப்பூட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது 42) மற்றும் ராமணய்யா (வயது 38) இவர்கள் இருவரும் மரம் வெட்டி அதனை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.
இன்று காலை ராமணய்யாவை இரு சக்கர வாகனத்தில் ரமேஷ் வேலைக்காக அழைத்து கொண்டு சின்ன புலியூர் அருகே ஒரு தைலம் மரம் தோட்டத்திற்கு மரத்தை பார்ப்பதற்காக சென்றனர்.
அப்போது அங்குள்ள வயல்வெளியில் சென்று கொண்டிருந்தபோது ஏற்கனவே அங்கிருந்த ஒரு மின்கம்பத்தில் மின் கம்பிகள் அருந்து கிடந்தன.
இதனை அறியாமல் சென்ற ரமேஷ் மற்றும் ராமணய்யா இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் மின் கம்பிகள் விழுந்து மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 2 பேரில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்றிரவு கும்மிடிப்பூண்டி பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது.
இதனை கவனிக்காமல் சென்றபோது மின்சாரம் பாய்ந்து ரமேஷ், ராமணய்யா உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பல மின்கம்பங்களில் உள்ள பழுதான மின் கம்பிகளை சரி பார்த்து புதிய மின் கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மின்கம்பி அறுந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tiruvallur power line fell down workers died