கணவர் உருவத்தை கையில் வரைந்த பிரேமலதா.!
tmtk leader premalatha vijayakanth tatoo husband photo
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
இவருடைய இறப்பிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என்று அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேரில் வர முடியாதவர்கள் பிறகு அவருடைய நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
மேலும், விஜயகாந்தின் இல்லத்திற்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி புகைப்படத்திற்கு மரியாதையை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தற்போது உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். இது குறித்த காணொளி ஒன்றை அவரது மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதாவது, பிரேமலதா விஜயகாந்த் தனது கணவர் விஜயகாந்தின் புகைப்படத்தை தனது கையில் டேட்டூவாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
tmtk leader premalatha vijayakanth tatoo husband photo