தேவையில்லாம "குண்டர் சட்டம்" போடக்கூடாது.. டிஜிபிக்கு தலைமை வழக்கறிஞர் அட்வைஸ்..!!
Tn advocate general advises DGP dont impose unnecessary goondas law
தமிழ்நாடு காவல்துறையினர் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என டிஜிபிக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் "பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு காவல்துறையினரால் பெரும்பாலான வழக்குகளில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் பரிந்துரைக்கும் முன்பு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் குண்டச் சட்டம் குறித்தான வழிமுறைகள் சுற்றறிக்கையாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையினர் குற்றவாளிகள் மீது தேவையில்லாமல் குண்டர் சட்டம் பயன்படுத்தவது தவிர்க்கப்படுவதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும்" என அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Tn advocate general advises DGP dont impose unnecessary goondas law