சட்டப்பேரவை கதவுகளை மூடி, அதிரடியாக நிறைவேறிய தீர்மானம்! 2017 க்கு பின் நடந்த எண்ணி கணிக்கும் முறை! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார்.

அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நாங்கள் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால், கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பின் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதன்படி சட்டப்பேரவை வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. உறுப்பினர்களான அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து, வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு, நடுநிலை ஆகிய மூன்றிற்கும் எழுந்து நின்ற தங்களது வாக்கை செலுத்த சபாநாயகர் அறிவுறுத்தினார்.

அதன்படி நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.

பாஜக உறுப்பினர்கள் 2 பேர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் பேரவைக்கு வரவில்லை.

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் அவர்கள் இதில் பங்கேற்கவில்லை.

இதனை தொடர்ந்து தமிழக தொடர்ந்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றி வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly 2023 Governor Against Bill


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->