மொத்தம் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் - முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் 1,93,891 அடுக்குமாடி குடியிருப்புகளில் 28,643 குடியிருப்புகள் சிதலமடைந்துள்ளன. சிதலமடைந்துள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் அடுத்த 3 ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும் என்று, 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் சென்னையில் கொடுங்கையூர், வஉசி நகர் போன்ற திட்டப் பகுதிகள், தஞ்சையில் ஏ.வி.பதி நகர் மற்றும்  திருச்சியில் கோட்டக் கொல்லை திட்டப்பகுதிகளில் உள்ள 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடி செலவில் மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப் பகுதிகள் கட்டுமான செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முன்னதாக சட்டப்பேரவையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலுரையில், "கடந்த  மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 30,326 தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அதிக ‘STARTUP’ நிறுவனங்களை கொண்ட மாநிலத்தில் தமிழ்நாடு தற்போது முதலிடத்தில் உள்ளது. சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள தென்னை நார் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்  கோவையில் ரூ.5 கோடி மதிப்பில் கயிறு வாணிப மேலாண்மை கழகம் அமைக்கப்படும். 

பேராவூரணி, பொள்ளாச்சி, பரமத்தி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி மையங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உட்சபட்ச நேர மின்சார பயன்பாடு சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.25-ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்படும்.

ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் பணி நிறைவடையும் வரையில் ‘Peak Hours’ மின்கட்டணம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly CM Stalin announce june 28


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->