டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் | கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்த எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைகள் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முக்கிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார்.

நேற்று தமிழகத்தையே அதிர வைத்த ஒரு சம்பவம் அரங்கேறிய நிலையில், அது குறித்து கவனயீர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளார்.

சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக, சட்டப்பேரவையில் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசி வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700 க்கும் மேற்பட்டோர் நில அளவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

மேலும் அதே பயிற்சி முகத்தை சேர்ந்த 2000 மேற்பட்டோர் இந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். 

இந்த தீர்மானம் குறித்து தமிழக முதல்வர் அல்லது துறை சார்ந்த அமைச்சர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இது குறித்த முழு விளக்கத்தையும் அவர் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly EPS kavana eerppu theermanam TNPSC Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->