மீண்டும் அமளி - ஸ்தம்பித்த சட்டப்பேரவை! இந்தமுறை முடிவை எடுத்த அதிமுக!
TN Assembly HoochTragedy ADMK Edappadi palanisamy
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடத்தப்பட்டது.
உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார்.
முன்னதாக நேற்று, இவ்விவகாரம் குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனச் சபாநாயகர் கூறியும் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் அதிமுகவினரை சபாநாயகர் அவைக்குள் அனுமதித்த பிறகும், விவாதத்தில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், இன்று சட்டமன்றம் கூடியதும் கேள்வி நேரத்திற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உடனடி விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர். இதனால் சிறுது நேரம் சட்டப்பேரவை ஸ்தம்பித்து போனது.
மேலும், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என தொடர் முழக்கமிட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
English Summary
TN Assembly HoochTragedy ADMK Edappadi palanisamy