தமிழகத்தில் பூரண மதுவிலக்கு? சட்டப்பேரவையில் முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்!
TN Assembly liquor Free Tamilnadu issue
நேற்று தமிழக சட்டப்பேரவையில் உள்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் ஜி கே மணி, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின், "உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை. எனவே இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இந்த குற்றங்களை முற்றிலும் தடுக்க முதல் கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 திருத்த மசோதா நாளை (இன்று) சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியதும் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட முன்வடிவை மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்து, பின்னர் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட திருத்தத்தின்படி கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 லட்சம் அபராதமும் விதிக்க இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் கள்ளச்சாராய குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், ஜாமின் முறிவினை நிறைவேற்ற நிர்வாக துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணி பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்க்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் தற்போது இல்லை. படிப்படியாக கடைகளை மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்" என்று சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார்.
English Summary
TN Assembly liquor Free Tamilnadu issue