ரேஷன் கடைகளில் இனி பேக்கிங் அரிசி! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று ரேஷன் பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அளித்துள்ள பதிலில், "நியாய விலைக்கடைகளில் அரிசியை பேக்கிங் செய்து வழங்க, தனியார் பங்களிப்புடன் 2500 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன அரிசி ஆலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பேக்கிங் செய்து வழங்கப்படும் அரிசிக்கு GST விதிக்கப்படுவதால், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 19,872 நியாய விலைக்கடைகள் சொந்த கட்டடங்களிலும், 9285 கடைகள் வாடகையில்லா கட்டடங்களிலும், 797 கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன

தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly minister info for Ration Shop Packing Rice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->