திருச்சியில் கலைஞர் பெயரில்... ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் விவரம் பின்வருமாறு,

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமும் அமைக்கப்படும்.

ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

சேலத்துக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவை சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் கூறினார், அந்த உறவை நானும் அறிவேன்.

சேலத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகளை அடுத்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly MK Stalin Announce for Trichy and Hosur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->