மொத்தம் 100 புதிய அறிவிப்புகள், புதிய மகளிர் காவல் நிலையங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு: 

* தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மணிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக அமைக்கப்படும்.

* மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என காவல் நிலையம் உருவாக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூரில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்.

* சென்னை கொளத்தூர், கேளம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஆகிய சரகங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

* கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், சேலம் ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

* ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களில் புதிய சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உருவாக்கப்படும்.

* ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக Q காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். பொன்னேரி காவல் சரகம் உருவாக்கப்படும்.

* மெரினா கடற்கரை கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறைக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

* அனைத்து காவல்நிலையங்களுக்கு கலவரத்தை அடக்க பயன்படும் உபகரணங்கள் வழங்கப்படும்.

* ஏற்காட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்.

* கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும்.

* மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.

* 201 புதிய காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

மேலும், காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் பணியின் போது உயிரிழப்போ, உடல் ஊனமோ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்த்தி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் : புகைப்படத்தை காண்க


மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த காவல்துறை திருத்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly Police Law Reforms MK Stalin 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->