ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டசபைக் கூட்டம் - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் உள்ளிட்ட காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஒவ்வொரு வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து காரில் புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுகிறது.

சரியாக, காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்குகிறது. 10.02 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குவார். ஒவ்வொரு வருடமும் நடைபெறும், கவர்னர் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அந்த வகையில், இன்றைய கவர்னர் உரையிலும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வரும் 19-ந் தேதி சட்டசபையில் நடப்பு ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் மீதான விவாதம் 23-ந்தேதி நடக்கிறது.

இந்த கூட்டத் தொடரின் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுகிறார். பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதமும் நடைபெறும். 

ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானிய கோரிக்கை விவாதம் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn assembly start with governor speech in tamilnadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->