சென்னை வரும் சுற்றலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் "எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்" என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று, சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

முக்கிய அறிவிப்பாக, சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, வள்ளுவர் கோட்டம், போன்ற பல்வேறு சுற்றுலாத் தளங்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்காக, சென்னையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்னும் திட்டம் பொது - தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்துக்கு 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்" என்று அந்த கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு செய்தி : சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

* தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

* தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, அறிமுகப்படுத்தப்படும்.  

* பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். 

* பள்ளி வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவரப்படும்.

* விழா நாட்கள் நீங்கலாக இணையவழியில் இரு வழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly tourist transport announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->