அதிமுக இல்லாமல் இந்த விவாதம் நடக்கக்கூடாது! அவர்களை உள்ளே கூப்பிடுங்க! ஸ்டாலின் கோரிக்கை, ரத்து செய்த சபாநாயகர்!
TN Assmebly Stalin ADMK MLA Kallakurichi Kalasarayam
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அவை நடவடிக்கையில் இன்று மட்டும் பங்கேற்க சபாநாயகர் தடை விதித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை அடுத்து, அந்த தடையை நீக்கி சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 52 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை முன்வைத்து, தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 'ஸ்டாலின் ராஜினாமா செய்' என்ற பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
மேலும், பேரவையில் அமலியில் ஈடுபட்டோர் பேசியது எதுவும் சட்டப்பேரவை குறிப்பில் இடம் பெறாது. விதிகளை மீறி நடந்து கொண்டதால், இன்று ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், சட்டப்பேரவை விதிகள் தெரிந்தும் திட்டமிட்டு அதிமுக நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளித்தும் அமலில் ஈடுபட்டதை அதிமுகவினர் தவிர்த்து இருக்க வேண்டும். ஜனநாயக முறையில் இந்த பேரவை நடைபெற வேண்டும் என்பதில் நான் அக்கறை கொண்டவன்.
எனவே பிரதான எதிர்க்கட்சிகளை விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுகிறேன். விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதிமுகவினரை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
English Summary
TN Assmebly Stalin ADMK MLA Kallakurichi Kalasarayam