திமுகவில் உள்ளவர்கள் கூட்டுக் களவாணிகள் - அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
tn bjp leader annamalai speech about dmk ministers
நேற்று பாஜக சார்பில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- "திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைத்தட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் உள்ளார்கள்.

தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. இந்த இயக்கத்தை தொடங்கி 18 நாட்களில் இதுவரை 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளார்கள். இதே வேகத்தில் சென்றால் நமது இலக்கான ஒரு கோடி கையெழுத்து என்பதை தாண்டி, 2 கோடி கையெழுத்தை நோக்கி சென்றுவிடும்.
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியை பற்றி பேசுவார். சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருகின்றனர்.
சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு; இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?. திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை; கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம். கர்மவீரர் காமராஜர், எம்.ஜி.ஆர். போன்றோர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்" என்று பேசினார். அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tn bjp leader annamalai speech about dmk ministers