பொய் பரப்புவதை நிறுத்துங்கள் - பொங்கி எழுந்த அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை புறக்கணித்ததுடன், சபாநாயகர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 

ஆளுநரின் இந்தச் செயல் தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் செயலுக்கு ஆளும் கட்சியின் அவை உறுப்பினர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரை முழுவதும் மத்திய அரசிற்கு எதிரான பொய்யை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசுக்கு எதிராக இது போன்ற பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள் என முதல்வருக்கு தெரிவித்துள்ளார். மேலும், சபை நாகரிகத்துடன் சபாநாயகர் உரையாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். அண்ணாமலையின் சமூக வலைதளத்தில் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn bjp leader annamalai speech about mk stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->