தலை துண்டிக்கப்படும்! தமிழக பாஜக பெரும் புள்ளிக்கு கொலை மிரட்டல்! பரபரப்பில் கோவை!
TN BJP Muruganantham Compalaint june
தனது தலையைத் துண்டித்து கொலை செய்து விடும்வதாக மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக்கோரி, பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்து வரும் முருகானந்தம் நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்த முருகானந்தம் பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். அவரின் அந்த மனுவில், கிருஷ்ணகிரி அருகே சாலையின் நடுவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து, அந்த ஆட்டின் தலையை சிலர் வெட்டினர்.
கடந்த ஏழாம் தேதி இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். என்னுடைய பதிவில் கமெண்ட் செய்த தேவராஜ் என்ற நபர், என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, என் தலையை துண்டாக வெட்டி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே தேவராஜ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகானந்தம் தனது அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
காவல் ஆனியரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முருகானந்தம் தெரிவிக்கையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சைப்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
திமுக அரசு இது அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? அவரின் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்" என்று முருகானந்தம் தெரிவித்தார்.
English Summary
TN BJP Muruganantham Compalaint june