சிறுபான்மையினரை தாஜா செய்யும் ராகுல் ஹிந்துவா? போலி ஹிந்து - தமிழக பாஜக தரப்பில் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மக்களவையில் இந்து கடவுள் சிவன் புகைப்படத்தை காட்டி ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலம் இருப்பது வன்முறையின் சின்னம் அல்ல. அது அகிம்சையின் சின்னம்" என்று ராகுல்காந்தி பேசி இருந்தார்.

மேலும், பிரதமர் மோடி கடவுளின் அவதாரம், காந்தியை ஆவணப் படம் மூலமே அவரை உலகம் அறிந்ததாகவும் சொல்கிறார். பிரதமர் மோடி  வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் இதை அறிந்திருக்கலாம். உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் தான்" என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அமித்ஷா, "வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது ராகுல் காந்திக்கு தெரியாது” என்று அமித்ஷா கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்திற்குள் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று அழைப்பது சரி அல்ல" பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார்.

மேலும் தமிழக பாஜக தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கபட்டு உள்ளது. குறிப்பாக பாஜகவின் தமிழ்நாடு மணிலா துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் எப்படி பேசக்கூடாது என்பதற்கு சிறந்து எடுத்துக்காட்டு இன்றைய ராகுல் காந்தியின் பேச்சு. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்வி ராகுலை விரக்தியின், வெறுப்பின் உச்சத்தில் கொண்டு போயுள்ளது என்பதையே ராகுலின் இன்றைய முதிர்ச்சியற்ற, ஆணவ பேச்சு உணர்த்துகிறது. காங்கிரஸ் தொடர்ந்து அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான அச்சாரம் இன்றைய பேச்சு.

நரேந்திர மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே இந்து சமூகம் கிடையாது.. என்கிறார் ராகுல் காந்தி. ஹிந்து என்றால் திருடன் என்றவர்களையும், ஹிந்து கோவில்களில் ஆபாச சிலைகள் உள்ளன என்றவர்களையும், ஹிந்து மதத்தை அழிப்பேன் என்று கொக்கரித்தவர்களையும் ஆதரித்து, கூட்டணி அமைத்து,  ஓட்டுக்காக, அந்த ஓட்டு தரும் பணத்துக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் ராகுல் ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! யார் யாரை பார்த்து பேசுவது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP Narayanan Thirupathy Condemn to Congress and RahulGandhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->