தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023.. குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

அந்த வகையில் இது திமுக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் 3வது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை  ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் .

வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

60,000 விவசாயிகளுக்கு சிறு, குறு நிலமற்ற விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும்

விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு.

விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Budget 2023 2 kg kezhvaragu in ration shop


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->