#BigBreaking |  மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்! நிதியை ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்தும் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அவிநாசி-சத்தியமங்கலம் உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்" என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படும்.

வடசென்னை பகுதி மக்களின் மருத்துவ சேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவ பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் அமைக்க 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும். 

பெண் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை, செப்டம்பர் 15 முதல் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Budget 2023 Madurai Kovai Metro Train Announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->