#தமிழகபட்ஜெட்2023 | அதிமுக உறுப்பினர்கள் அமளி! மாபெரும் சோழர் அருங்காட்சியகம்! பட்ஜெட் அறிவிப்புகள்!
TN Budget 2023 march 20
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் தொடங்கிய உடன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கி உள்ளார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்கவில்லை என்று, அதிமுக எம்எல்ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பட்ஜெட் அறிவிப்பில் சில :
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
சங்கமம் கலை விழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்
25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
வயது முதிர்ந்த மேலும் 591 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும்
இலங்கை தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட 223 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
ஸ்டான்லி அரசும் மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவ பிரிவு புதிதாக அமைக்கப்படும்
கிண்டிகள் கருணாநிதி பெயரிலான மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இரண்டு மடங்காக, 40 லட்சம் உயர்த்தப்படும்.