#TNBUDGET2023 : கரும்பு விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு.!
TN Budget 2023 sugarcane special amount
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
அந்த வகையில் இது திமுக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் 3வது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் டன்னுக்கு ரூ.195 கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்
அனைத்து மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலும் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்.
English Summary
TN Budget 2023 sugarcane special amount