தமிழ்ப் புத்தாண்டு எதிரொலி! சென்னையில் இருந்து 3 நாள்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!
TN Bus Tamil New Year
சென்னையில் இருந்து 3 நாள்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (12.04.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 1,153 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,245 பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர்.
11.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் 2,092 மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர்.
ஆக கடந்த 11.04.2025 முதல் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் நேற்று (12.04.2025) பௌர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 877 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.