#BigBreaking :: ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு தமிழக சிபிசிஐடி நோட்டீஸ்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் பலர் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டதால் தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு பல்வேறு கட்சிகளும் ஆளுநரை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்பு ஏற்படுத்து தொடர்பாக 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் டிரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பஜ்ஜி ஆகிய 6 ஆன்லைன் சூதாட்டம் நிறுவனங்களுக்கு தமிழக சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூடு ஆட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி தரப்பினர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து அதற்கான  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CBCID send Notice to Online Gambling Companies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->