ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..எதற்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


உங்களில் ஒருவன் என்ற நூலைப் படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த புத்தகத்தை படித்து விட்டு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் " 'உங்களில் ஒருவன்' புத்தகத்தைப் படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்வின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN chief minister MK Stalin thanks to Super Star Rajinikanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->