பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.!
TN CM MK Stalin speech about in womens day
மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து இன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
![](https://img.seithipunal.com/media/womens day a.jpg)
இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்..
அப்போது பேசிய அவர், உலகத்தில் எல்லா நாளும் போற்றக்கூடியவர்கள் பெண்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். மகளிர் தினம் மனித குலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாளாகும்.
![](https://img.seithipunal.com/media/stalin mk.png)
அரசனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. ஆங்கிலேயர்கள் படையெடுப்பாலும் பண்பாட்டு மாற்றத்தாலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு முடக்கப்பட்டார்கள். முடக்கப்பட்ட பெண்களை மீட்க தொடங்கப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம்.
பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள் தான் இலவச பேருந்து சலுகை என்பது மகளிருக்கான உரிமை. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
TN CM MK Stalin speech about in womens day