மக்களே இதை கவனிங்க! மின்கட்டண முறையில் அதிரடி மாற்றம் - புதிய உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சுமார் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் உள்ளது. குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை என மொத்தமாக ன் 3 கோடியே 32 லட்சம் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை உள்ளது. 

இந்த நுகர்வோர்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப கணக்கிடப்படும் மின் கட்டணத்தை, மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் செலுத்தி வருகின்றனர்.

கடந்த நிதியாண்டில் (2023-24) அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் ரூ,60 ஆயிரத்து 505 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில், 83 சதவீதம் ஆன்லைன் மூலமாக மட்டும் ரூ.50 ஆயிரத்து 217 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது என்ற நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டங்களை ஆன்லைன் மூலமே நுகர்வோர்கள் காட்ட வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், மின்வாரிய அலுவலக கவுண்ட்டர்களில் கூட இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இரு மாதத்திற்கு 820 யூனிட்டுக்கு மேல் (வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு இந்த யூனிட் இன்னும் குறையும்) மின்சாரம் பயன்படுத்தும் அனைவருக்கும் 5000 ரூபாய்க்கு மின்கட்டணம் வந்துவிடும். இனி அவர்கள் ஆன்லைன் அல்லது மின் அலுவலகங்களில் காசோலை, டி.டி. மூலம் தான் பணம் செலுத்த முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Electricity Board Electricity Bill Online Payment 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->