விமான சாகச நிகழ்ச்சி - தமிழக ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் இன்று விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த சாகச நிகழ்ச்சியைப் பார்க்க சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்காக பிரத்தியேகமாக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என்று  2 மணி நேரம் இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சாகச நிகழ்ச்சியை காண வரும் பார்வையாளர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்திருக்கின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 8 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn governor and chief minister participate air show in chennai merina


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->