குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் - தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு.!
tn govt announce bussiness loan camp in cyclone affected placed
கடந்த ஆடு டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி பெய்த கனமழையால், வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர், திரை பிரபங்கள் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 12-ம் தேதி வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் ஏராளமான இடங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
தமிழக முதல்வர் அறிவுரையின்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் ‘முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்’ எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் காஞ்சிபுரம். திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.
இக்கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஒரு வருட காலத்திற்குள் உரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் அல்லது மாதந்தோறும் ரூ.1000 வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்தலாம். ‘முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்’ முகாம்கள் நான்கு மாவட்டங்களிலும் இன்று முதல் 12.01.2024 வரை நடைபெறவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn govt announce bussiness loan camp in cyclone affected placed