காப்பகங்களில் உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

அதன் படி இந்தத் திட்டத்தை செயல்படுத்த 1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதாவது, மொத்தம் 1,400 மாணவிகளுக்கு காரத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இந்த பயிற்சிக்கான பயிற்றுநர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பயிற்சி வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர், மைய கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது". என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announce Self defense training to home students


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->