தமிழக மக்களை பதற வைத்த காணொளி: கொடூர மனம் கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர் சஸ்பெண்ட்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
TN Govt Bus Driver suspended
"பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி" எனும் தலைப்பில் இன்று காலை வெளியான ஒரு காணொளி தமிழக மக்களை பதற வைத்துள்ளது.
காணொளியில் குறிப்பிட்டுள்ள பேருந்து எண் TN32N2389, தடம் எண் 1C, வேலூர் மண்டலம், ஆம்பூர் கிளையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்தாகும்.
இன்று காலையில் இப்பேருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நடை எடுத்து ஆலங்காயம் செல்லும் வழியில் கொத்தகோட்டை கிராமம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுவதற்காக பள்ளி மாணவி ஒருவர் கைக்காட்டிய நிலையிலும் பேருந்தை நிறுத்தாமல் சிறிது தூரம் சென்று பேருந்தினை நிறுத்தி மாணவியை பேருந்தில் ஏற்றியுள்ளார்.
மாணவி பேருந்தில் ஏறுவதற்காக பேருந்தின் பின்னால் ஓடிச்சென்ற காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக இருந்த ஆம்பூர் பணிமனையை சார்ந்த பேருந்து ஓட்டுநர் முனிராஜ் பணி எண் 42069 உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது துறைரீதியான தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
English Summary
TN Govt Bus Driver suspended