மகளிர் தினம்: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
TN Govt CM MK Stalin Announce
சென்னையில் இன்று தமிழக அரசு சார்பில் மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், நிகழ்ச்சியில் பேசியதாவது, "பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த அரசு தான் தி.மு.க. அரசு எனக் குறிப்பிட்டார்.
பெண்களின் விடுதலைக்காக வாழ்க்கை முழுவதும் பாடுபட்டவர் தந்தை பெரியார் என்றும், மகளிருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கியது நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் நடந்ததாக தெரிவித்தார். மேலும், மகளிருக்கு சொத்துரிமை வழங்கியவர் மறைந்த முதல்வர் கலைஞர் என அவர் நினைவு கூர்ந்தார்.
மகளிர் தினம் கொண்டாடப்படும் மார்ச் மாதத்தில் தான் பிறந்தவனாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
மகளிரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முக்கிய நகரங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கைகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும். புதிய தோழி விடுதிகள் காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட உள்ளன.
பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் 4.42 லட்சம் மகளிருக்கு ரூ.3,190 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் வளர்ச்சியை ஆதரித்து தமிழக அரசு தொடர்ந்து பல முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
English Summary
TN Govt CM MK Stalin Announce