தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடை விதிக்கவில்லை.. தமிழ்நாடு அரசு விளக்கம்.!
TN govt explain the Kerala not ban in tamilnadu
கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு நிர்வாகங்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.
அதனைத் தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதனையடுத்து கேரளா ஸ்டோரி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரித்தார்.
அந்த வகையில் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசு ஏன் படத்தை தடை செய்ய வேண்டும்.
மேலும் படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும். அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை செய்ததற்கான விளக்கம் கேட்டு தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு பணத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் மாநிலம் முழுவதும் மொத்தம் 19 திரையரங்குகளில் திரையிடப்பட்டது என தெரிவித்துள்ளது.
மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பொதுமக்கள் யாரும் பார்க்க வராது தான் திரையரங்குகளில் அந்த படத்தை நீக்கிவிட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள் என தெரிவித்துள்ளது. மேலும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
English Summary
TN govt explain the Kerala not ban in tamilnadu