தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் – தமிழக அரசு அதிரடி!
TN Govt IAS Officers transfer
தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகள்:
விஜயேந்திர பதாரி – சென்னை காவல் கூடுதல் ஆணையராக நியமனம்.
கார்த்திகேயன் – சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்தோஷ் குமார் – பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி. ஆக பொறுப்பு ஏற்கிறார்.
சீமா அகர்வால் – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநராக நியமனம்.
இதற்கு முன்பு, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த ஆபாஷ்குமார் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சீமா அகர்வால் அந்தப் பதவியைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Govt IAS Officers transfer