அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் "வெயிட்டேஜ்" முறை ரத்து.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கிழ் இயங்கும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில் வெய்ட்டேஜ் எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் "டி.ஆர்.பியை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இனி ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்படுவார்.

வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், இணை இயக்குனர், துணை இயக்குனர் அந்தஸ்து உட்பட 71 புதிய பதவிகள் உருவாக்கப்படும். போட்டித் தேர்வுக்கு பின் சான்றிதழ் சரி பார்ப்புக்கு 1.25 என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். அரசு பள்ளிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மட்டுமின்றி பொறியியல், சட்ட கல்லூரிகள் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பேராசிரியர்களும் டி.ஆர்.பி வழியாக தேர்வு செய்யப்படுவார்கள். 

அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி போன்று டி.ஆர்.பியிலும் இனி வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்படாது. போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்கள் உயர்கல்வி அல்லது வேறு தகுதிகள் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாது.

டி.ஆர்.பி அமைப்பு வெளிப்படையாகவும் அரசின் ரகசியங்களை பாதுகாத்து செயல்பட வேண்டி உள்ளதால் அதற்கான தனி கட்டிடம் மற்றும் வளாகம் அமைக்கப்படும்" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt issued an ordinance for abolition of Weightage system


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->