ஆன்லைன் ரம்மி|| தமிழக அரசின் மேல்முறையீடு மனு; நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால், இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் இந்த சட்டத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு சார்பில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt Online Rummy petition heard tomorrow going to Supreme Court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->